முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் மில்லரின் மகள் காலமானாரா? – குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்

தென்னாப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானதாக தகவல் வெளியானது. அது உண்மையா? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

 

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களை விளையாடி வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான டேவிட் மில்லர் நேற்று ஒரு புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக வைத்துள்ளார். அது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் சிறுமி ஒருவருடன் இருப்பது போன்றும், அதில், ‘RIP my லிட்டில் ராக்ஸ்டார், காதல் எப்போதும் இருக்கும்!’ என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரது மகள் என்றும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

டேவிட் மில்லரின் மகள் துரதிர்ஷ்டவசமாக காலமானார் என்று பல இணையதளத்தில் தகவல் உலாவி வரும் நிலையில், அது மில்லரின் மகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 6 வருடங்களாக அல்லது அதற்கு முன்பே மில்லருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அனே என்ற ஒரு குட்டி ரசிகர் என கூறப்படுகிறது. ஆனாலும் மில்லர் அந்த சிறுமியை மகள் போலவே பார்த்ததாகவும் சிலர் தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் பரவியதையடுத்து வருத்தமாக உள்ளது என பலர் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். வீரனாக வலுவாக இருங்கள் என்றும், மிகவும் வருத்தமாக இருக்கிறது, R.I.P குட்டி தேவதை, டேவிட் மில்லர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள மில்லரின் நெருங்கிய வட்டாரங்கள், அவருடைய மகள் அல்ல தோழர்களே. டேவிட் மில்லர் தனது மகளை இழந்தார் என மக்கள் இந்த செய்தியை பரப்பி வருகின்றனர். மில்லர் மிகவும் நேசித்த அவரது ரசிகை, நலம் விரும்பி. மேலும் அவள் புற்றுநோயால் போராடி தோற்றாள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் இறந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி இபிஎஸ் வலியுறுத்தல்!

Gayathri Venkatesan

2 வருடம் தடை விதித்தது பேஸ்புக்: ’அவமதிப்பு’ என்கிறார் டிரம்ப்!

Halley Karthik

ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் – எம்.பி. கனிமொழி

Web Editor