கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை அசின்? இன்ஸ்டாவில் விளக்கம்!

நடிகை அசின் தனது திருமண விவாகரத்து தொடர்பான வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை அசின். அவர் நடிப்பில் வெளியான கஜினி…

நடிகை அசின் தனது திருமண விவாகரத்து தொடர்பான வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை அசின். அவர் நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் அசினுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்ததுடன் பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் அமீர் கான், சல்மான் கான் உள்ளிட்ட உச்ச நடிகர்களுடன் நடித்தார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அசின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தன் கணவர் தொடர்பான அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கினார். இதனால், சந்தேகமடைந்த ரசிகர்கள் அசின் விவாகரத்து செய்யப்போகிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

தற்போது, அசின் தன் இன்ஸ்டாகிராமில் அவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், ‘எங்களின் கோடைகால விடுமுறைக்கு இடையே ஆதாரம் இல்லாத இந்தச் செய்தியைப் பார்க்கும் இந்நேரத்தில் நாங்கள் இருவரும் எதிரே, எதிரே அமர்ந்துகொண்டு காலையுணவை அருந்திக்கொண்டிருக்கிறோம். இது, எங்கள் திருமணத்திற்காக குடும்பத்தினர் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் பிரிந்துவிட்டதாக வெளியான வதந்தியை நினைவுபடுத்துகிறது. உருப்படியாக எதையாவது செய்யுங்கள். இந்தக் கோடைகால விடுமுறையில் என் 5 நிமிடம் வீணானது.’ எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.