ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் குறைபாடு இருந்தால் நடவடிக்கை – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதாக மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதாக மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2014-ம் ஆண்டில் 10-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், 9 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் மாநில அரசு செயல்படுத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் தவறு மற்றும் குறைபாடு இருந்தால் மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொழில்நுட்ப பிரச்னை உள்ளதால் மாற்று இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வி.கே.சிங் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.