மீண்டும் விமான சேவையை தொடங்கிய ஈரான்…!

போர்நிறுத்தத்தை தொடர்ந்து ஈரான் அரசு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது.

ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் வெடித்தது. இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தியது. அதே போல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

உலகளவில் இந்த போரானது பொருளாதாரரீதியான கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் வர்த்தக ரீதியான விமான சேவைகளை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளது.இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்தான்புல், ஓமனில் உள்ள மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள மதீனா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.