ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் இன்று 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநகர காவல் ஆணையராக கபில் குமார் சரத்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர ஆணையராக இருந்த அபிஷேக் தீக்ஷித், சென்னை ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ஜெ. லோகநாதன், தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர். திருநாவுக்கரசு, நெல்லை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி பி. பகலவன், சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு இணை ஆணையராக இருந்த திஷா மிட்டல், சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு இணை ஆணையராக இருந்த பண்டி கங்காதர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.