#IPL2026 | ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் அணி – குஜராத் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றியும், 4 தோல்வியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களமாக தொடங்கிய அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்து சற்று தடுமாறுகிறது. குஜராத் அணியும் 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றியும், 4 தோல்வியை கண்டு 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் கால் பதிக்கிறது. குஜராத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணி தீவிரம் காட்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.