#IPL2026 | ஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில், முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 45-வது லீக் ஆட்டத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு ஹைதராபாத் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில், முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்புத் தொடரில் ஆடிய 9 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்றுள்ள ஐதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது. இதுவரை இவ்விரு அணிகளும் 31 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 20 முறையும், ஐதராபாத் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து 46-வது லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியை, முன்னாள் சாம்பியனான குஜராத் அணி எதிர்கொள்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, 5ல் வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இதுவரை இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 4 முறையும், குஜராத் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.