19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறகிறது. அதன்படி, இன்று மாலை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகிறது. இந்த நிலையில் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
டெல்லி அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. 5 முறை சாம்பியனான மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 13 ஆண்டுக்கு பின் போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.







