ஐபிஎல் 2024 : கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.  நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டாடா ஐபிஎல்…

17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 

நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி, 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டில் தோல்வியை தழுவியுள்ளன. 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

அதேசமயம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 2 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் வெற்றிப் பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் செல்ல இயலும். இவ்விரு அணிகளும் இதுவரை 32 தடவை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 21 ஆட்டத்திலும், பஞ்சாப் அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடதக்கது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.