ஐபிஎல் 2023 கோப்பை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் 2023 கோப்பை நாளை சென்னை வந்தடைகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. இந்த முறையும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார்.
கடந்த வாரத்தில் சென்னை வந்த தோனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சென்னை அணி வீரர்களுகும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் கோப்பையை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 4 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 2 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வென்றுள்ளன. இந்த முறை எந்த அணி வெல்லப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்மைச் செய்தி: ’எடப்பாடி பழனிசாமி காமெடியாக பேசுவதாக நினைத்து பேசுகிறார்’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் ஐபிஎல் கோப்பை நாளை சென்னை வந்தடைகிறது. சென்னை ரசிகர்களுக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும். நாளை இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.







