ஐபிஎல் போட்டி : கொல்கத்தா அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த CSK

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில்  கொல்கத்தா அணிக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.…

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில்  கொல்கத்தா அணிக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7:30 மணிக்கு நடைபெற்று வருகிறது.  இந்த டி20  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் 12 போட்டிகளில் விளையாடி நிலையில்  7 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டியில் முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது

இன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கெய்வாட் மற்றும் கான்வாய் ஆகியோர் களமிறங்கினர். சிவம் தூபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில்  48 ரன்கள் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 144 எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.