IPL 2026 : முதல் இரண்டு வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என அறிவிப்பு!

2026 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2026 ஐபில் தொடர் இன்று தொடங்குகிறது. 2026 ஐபில் தொடரின் எம்.எஸ். தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன நடக்க போகிறது என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 வாரங்களுக்கு தோனி விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தசைப்பிடிப்பு காரணமாக தோனி சிகிச்சை பெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் 2 வாரங்கள் தோனி விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.