சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதனிடையே நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.13,660-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சரவன் ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.







