IPL 2024 : பெங்களூர் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்!

ஐபிஎல் 2024 தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.  17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம்…

ஐபிஎல் 2024 தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : “இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்நிலையில்,  நேற்று நடைபெற்ற 18வது லீக் போட்டி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றதுஇந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதையடுத்து, 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் விளாசி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024ன் 19 வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.  இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும்.  இந்த சீசனில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது.  அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி,  ஒரு வெற்றியுடன் உள்ளது.

இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 3 வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.