ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி!!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில், 189 ரன்கள் குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ளென் மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ரன்களும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 39 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படியுங்கள் : கர்நாடக தேர்தல் : ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற முடிவு!

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் அதிகபட்சமாக, தேவ்தத் படிக்கல் 52 ரன்கள் அடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.