முக்கியச் செய்திகள் விளையாட்டு

டெல்லி கனவு டமார்.. 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா தோனி படை?

ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

ஐபிஎல்  தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வென்றது.

இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் கொல்கத்தா அணி, த்ரில் வெற்றி பெற்றது. இதனால் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருந்த டெல்லி அணியின் கனவு டமார் என உடைந்தது.

இதையடுத்து இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி நாளை மோதுகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டு பிளிஸ்சிஸ் பேட்டிங்கில் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கின்றனர். கடந்த போட்டியில் ராபின் உத்தப்பா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசிக்கட்டத்தில் தோனியும் அதிரடி காட்டினார். பந்துவீச்சில் தீபக் சாஹர், ஹசில்வுட் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கொல்கத்தா அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டலாக இருக்கிறது. அந்த அணியின் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், திரிபாதி, நிதிஷ் ராணா ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். பந்துவீச்சில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, பெர்குசன், ஷகிப் அல் ஹசன் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர்.

அதனால் நாளை நடக்கும் இறுதிப் போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த தொடரில், சென்னை அணி, சேஸிங் செய்து தோல்வியை தழுவியதில்லை. அதனால் டாஸ் வென்றால் சென்னை அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும் என்று தெரிகிறது.

தோனியின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருப்பதால் அவர் தலைமையில், சென்னை அணி 4-வது முறையாக பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

ஏற்கனவே 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணி 3-வது முறை யாக கோப்பையை கைப்பற்ற போராடும் என்பதால் நாளை நடக்கும் இறுதிப் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement:
SHARE

Related posts

’வலிமை’ நாயகியின் வெப்தொடர்.. 28 ஆம் தேதி ரிலீஸ்!

Halley karthi

கொரோனா 2ம் அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறும் – வெளியுறவு அமைச்சர்

Ezhilarasan

பாதுகாப்பு அதிகாரி தற்கொலை வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத சுவேந்து அதிகாரி

Ezhilarasan