முக்கியச் செய்திகள் விளையாட்டு

’அவர் மேல எல்லாம் மரியாதையே இல்லை..’ முன்னாள் வீரர் மீது பாய்ந்த கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான கர்ட்லி அம்புரோஸ் மீது தனக்கு எந்த மரியாதையும் இல்லை என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவரைச் சேர்க்கக் கூடாது என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.

அவர் கூறும்போது, கிறிஸ் கெய்ல் சமீப காலமாக சரியாக ஆடவில்லை. அதனால் டி-20 உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் ஆடும் லெவனில் அவரை சேர்க்க முன்னுரிமை அளிக்கக் கூடாது என்று அம்புரோஸ் தெரிவித்திருந்தார்.

இதனால் ஆவேசமான கிறிஸ் கெய்ல், அணியில் முதன்முதலாக நான் இடம்பெற்றபோது அம்புரோஸ் மீது மரியாதை இருந்தது. ஆனால், அடுத்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அம்புரோஸ் இப்போது இவ்வாறு விமர்சிக்கிறாரா? என்பது தெரியவில்லை. அவர் மீது இப்போது என எந்த மரியாதையும் இல்லை. எப்போது அவரை பார்த்தாலும் எதிர்மறையாக பேசுவதை நிறுத்திவிட்டு அணிக்கு ஆதரவாக செயல்படுங்கள் என்று கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

வெள்ளை மாளிகையில் தமிழ் மகள்!

Jeba Arul Robinson

இந்தியாவில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா : 282 பேர் உயிரிழப்பு

Ezhilarasan

வியட்நாமில் அரசுக்கு எதிரான பேஸ்புக் பதிவுகளைப் பகிர்ந்த நபருக்கு 10 ஆண்டு சிறை!

Halley karthi