திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் | இபிஎஸ் தலைமையில் நடைபெறும் – சிவி சண்முகம்

திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாக்கயராஜ் அறிமுக கூட்டம் மற்றும்…

திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாக்கயராஜ்
அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் அதிமுக
அலுவலகத்தில் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம்,  “பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கலைத்து கட்சியை உடைத்தவர்களால் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியவில்லை அதற்கு தொண்டர்கள் காரணம் என்றும் இரட்டை இலை சின்னத்தில் பதவி வகித்த துரோகி இரட்டை இலை சின்னத்தை முடக்க பார்ப்பதாகவும்,
அதிமுகவிற்கு நாடாளுமன்ற தேர்தல் முக்கியமானது என கூறினார்.

திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. மத்திய அரசு செய்த துரோகத்தை மக்களிடையே எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டுமெனவும், பிரதமர் இன்றைக்கு தமிழகத்திற்கு வருகிறார்.

இவர் வெள்ளம் வரும்போதும், வெயில் அடிக்கும் போது வரவில்லை என்றும் அதிமுகவிற்கு மேலிருந்த பாரம் நீங்கியதாக  சிவி சண்முகம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.