#PBKSvsRCB | இடையில் குறுக்கிட்ட ஆலங்கட்டி மழை..! பஞ்சாப் அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

தரம்சாலாவில் ஆலங்கட்டி மழையின் காரணமாக சிறிது நேரம் போட்டி தடைபட்ட நிலையில், பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 242 ரன்களை நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22…

தரம்சாலாவில் ஆலங்கட்டி மழையின் காரணமாக சிறிது நேரம் போட்டி தடைபட்ட நிலையில், பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 242 ரன்களை நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில்  நடைபெற்று வருகிறது. இதுவரை 57 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் தரம்சாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில்  இன்று நடைபெறும் 58வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் 10 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில் திடீரென தர்மசாலாவில் ஆலங்கட்டி மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மழை நின்றதையடுத்து போட்டி மீண்டும் துவங்கியது. 8.20 மணிக்கு நிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் 8.55 மணிக்கு தொடங்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்த போட்டியில், 20 ஓவர் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை குவித்தது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.