நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மனிதகுலத்திற்கான யோகா என்பதே இந்த ஆண்டுக்கான கருத்தியலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தை ஒட்டி உலகின் பல பகுதிகளிலும் யோக பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச யோகா தினம் எவ்வாறு உலக அளவில் உண்மையாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உயிர்களைக் காக்கவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை போக்கவும் மிகச் சிறந்த கருவியாக யோகா திகழ்ந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாளைய தினம் கர்நாடகாவின் மைசூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.