கடந்த ஐந்து கல்வி ஆண்டுகளில் இல்லாத வகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற 10 & 12-ஆம் வகுப்பு மாணவ/ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021- 2022 கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 86.53 சதவீதமும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 75.84 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 5 கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்: (12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு)
2016-17 (93.07%)
2017-18 (93.36%)
2018-19 (92.44%)
2019-20 (100%)
2020-21 (100%)
2021-22 (86.53)
கடந்த 5 கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்: (10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு)
2016-17 (88.74%)
2017-18 (88.79%)
2018-19 (90.49%)
2019-20 (85.80%)
2020-21 (100%)
2021-22 (75.84%)
அண்மைச் செய்தி: ‘5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை ஆய்வு மையம்’
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தும் ஒரே பள்ளியில் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் பள்ளிகளின் தலைமை ஆசிரியரோடு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.








