சர்வதேச மகளிர் தினம்; பிரதமர் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டுவருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல முக்கிய அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டுவருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல முக்கிய அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமூகத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். பெண்கள் மேம்பாட்டில் அரசு முக்கிய கவனம் செலுத்துவதுடன் பல்வேறு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு போதிய இயங்கி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு பிரதானமானது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூகத்திற்கு தேவையான நிதியை சேர்ப்பது, வீட்டை பராமரிப்பது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதால் நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமானதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.