முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சர்வதேச பயணிகள் விமானங்கள் ரத்து நீட்டிப்பு!

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகச் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏப்ரல் 30ம் தேதி வரை இடைநிறுத்தம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “ கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலைக காரணமாகச் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏப்ரல் 30ம் தேதி வரை இடைநிறுத்தம் செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் இந்த விதிமுறை சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் விமான போக்குவரத்துக் கழகத்தில் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சரக்கு விமானங்களுக்குப் பொருந்தாது. அவசரக் காலத்தில் கொரோனா நோய் பரவலைப் பொருத்து குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதிமுதல் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்தது.


பின்னர் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரச் சிறப்பு சர்வதேச விமானங்கள் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20 நாடுகளுடன் இந்தியா விமான போக்குவரத்துக் கழகம் உடன்படிக்கை செய்துள்ளது.


இந்நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சர்வதேச பயணிகள் விமானங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது” – அமைச்சர் சேகர்பாபு

Halley Karthik

டாஸ்மாக் வேன் கவிழ்ந்தது- ஆறாக ஓடிய மது

G SaravanaKumar

காவல் புகார் ஆணையம் – வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

Halley Karthik