மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அதில் ஒன்றான…

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அதில் ஒன்றான இந்த காத்தாடி திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் பலர் பங்கேற்கவுள்ளனர்.

 

தமிழ்நாடு சுற்றுலாத் துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் மூலம் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறவுள்ளது. 20 அடி உயரம் முதல் 3 அடி சிறிய ரக காற்றாடிகள் வரை திருவிழாவில் இடம்பெறுகின்றன.

உலகின் கவனம் ஈர்க்கும் மாமல்லபுரம்

பல்வேறு உணவு கடைகள், விளையாட்டுகள், காற்றாடிகள் தயாரிப்பது குறித்த பட்டறைகள், குழந்தைகளுக்கான போட்டிகள் உள்ளிட்டவையும் இடம்பெறவுள்ளன.  நாள்தோறும் மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஏற்கனவே சர்வதேச புகழ்பெற்ற வரலாற்று மற்றும் சுற்றுலாத் தலமான மாமல்லபுரம், சென்னை செஸ் ஒலிம்பியாட்டைத் தொடர்ந்து சர்வதேச காற்றாடித் திருவிழாவால் மேலும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க உள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.