முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சர்வதேச திரைப்பட விழா; இந்தியன் பனோரமாவில் “கிடா” தேர்வு

உலகம் முழுவதும் புகழ்பெற்ற திரைப்பட விழாவாக 80 வருட காலமாக நடைபெற்று வரும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் “கிடா” எனும் தமிழ் படமும் தேர்வாகி அசத்தியுள்ளது.

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “கிடா”. தமிழ் சினிமாவை உயர்த்திப் பிடிக்கும் உன்னத படைப்பாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி அசத்தியுள்ளது. கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வான மூன்று தமிழ்ப் படங்களில், ஒரு படமாக ’கிடா’ தேர்வாகியுள்ளது.

தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக உருவாகியுள்ளது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ள இப்படத்தை “கிருமி, ரெக்க” படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகில் 35 வருடங்களாக பல வெற்றிப்படங்களை தந்த ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா இப்படத்தை தயாரித்துள்ளனர். பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்-அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Web Editor

குட்கா வழக்கு; தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

G SaravanaKumar

தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்

EZHILARASAN D