முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லை காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

நெல்லையில் ஸ்ரீகாந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனர்.

திருநெல்வேலியில் உள்ள நெல்லைய்யப்பர் மிகவும் பிரசித்தி பெற்ற சிவதலமாகும். இங்கு  நடைபெறும் திருவிழாக்களில் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஆடி வளைகாப்பு மற்றும் ஐப்பசி திருகல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12ம் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 10 தினங்கள் தினமும் காலை, மாலை காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது. நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.00 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன. சுவாமி அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி,மாலை மாற்றும் வைபவம் பாலும் பழமும் கொடுத்தல் என சடங்குகள் நடைபெற்றன.

சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்துக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவாமூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. அதனை தொடா்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஆன்மீக செய்திகளுக்கு நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலை பின்தொடர்ந்து நேரலையில் பார்த்து மகிழுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் பரப்புரையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய ஸ்டாலின்!

எல்.ரேணுகாதேவி

அரசாணை 115 விவகாரம் : ஆய்வு வரம்புகள் ரத்து – தமிழ்நாடு அரசு உத்தரவு

NAMBIRAJAN

சிறார் கொரோனோ தடுப்பூசி: முதல் நாளிலேயே 10% செலுத்திய தமிழ்நாடு

Arivazhagan Chinnasamy