முக்கியச் செய்திகள் குற்றம்

சாதி மறுப்பு திருமணம்; பெண்ணை தூக்கிச் சென்ற பெற்றோர்

நாகையில் காதலனை திருமணம் செய்த பெண், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வந்தபோது அவரை பெற்றோர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது.

நாகை மாவட்டம் செம்பியன் மாதேவி கிராமத்தை சேர்ந்த மதன்ராஜ் என்பவர்  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே மருத்துவமனையில் திருச்சி மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த பாரதி என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது காதலாக மாறியுள்ளது. இருவரும் மாற்று சாதியினர் என்பதால் பாரதியில் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அவர் மதன்ராஜை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து பாரதியின் பெற்றோர் இன்று நாகையில் மதன்ராஜ் வீட்டில் விசாரித்துள்ளனர். அப்போது நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்ய சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சார்பதிவாளர் அலுவலகம் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பாரதியின் பெற்றோரும் உறவினர்களும் அவரை இழுத்துச் சென்று காரில் ஏற்றிச் செல்ல முயன்றனர். அப்போது மதன்ராஜின் உறவினர்கள் காரை மறித்ததோடு, போலீசாரின் உதவியுடன் பாரதியை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, குரோஷியா அணிகள் அபார வெற்றி!

Vandhana

கோல்டன் விசா வழங்குவதில் அரசியலா?

Halley karthi

”புத்த இலக்கியங்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்பட வேண்டும்”- பிரதமர் மோடி!

Jayapriya