கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்: முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்!

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார்…

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இன்று கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைச் சேர்த்து தமிழக அரசு 1986ஆம் ஆண்டு ஆணையிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, “2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தின்போது கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்று இருந்தனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத் திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணியில் நியமனம் செய்யப்படவில்லை” என்று விவரித்துள்ளார்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.