முக்கியச் செய்திகள் தமிழகம்

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் 10ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பில் மாணவர்கள் சேர்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். ஏதேனும் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால், கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 10 முதல் 15% வரை மட்டுமே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை மிக அதிகமான விண்ணப்பங்கள் வந்தால், பள்ளி அளவில் தேர்வு வைத்து மாணவர்களை அனுமதிக்கலாம் என்றும் ஜூன் 3-ம் வாரத்தில் வகுப்புகளைத் தொடக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நாடாளுமன்றத்தில் அமளி; குடியரசுத் துணைத்தலைவர் கவலை

Halley karthi

மகராஷ்டிராவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நாராயண் ரானே

Vandhana

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

Saravana Kumar