மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டபோது, பூட்டப்பட்ட கடைகளில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் பொருட்கள் அகற்றப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. அந்த பகுதியின் இருபுறங்களிலும் 45 கடைகள் இருந்தன. அங்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 36 கடைகளுக்கு மேல் தீயில் எரிந்து சாம்பலானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் கோயிலின் உள்ளே உள்ள பல்வேறு கடைகள் மூடப்பட்டன. ஆனால் கடைகளில் இருந்து பொருட்கள் அகற்றப்படாமலேயே இருந்து வந்தன. இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு கோபுரத்தின் உள்ளே செல்லும் பகுதியிலுள்ள மூடப்பட்ட கடைகளிலுள்ள பொருட்கள் அகற்றப்பட்டன.
சிலைகளை மறைப்பதால் கோவில் நிர்வாக ஊழியர்கள், காவல்துறை உதவியுடன் பொருட்களை அகற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் உள்ளே அமைந்துள்ள 12 கடைகளை தவிர 53க்கும் மேற்பட்ட கடைகளில் உள்ள பொருட்களை அகற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் கோயில் ஊழியர்களின் உதவியுடன் பூட்டி இருந்த கடைகளில் இருந்து எந்த சேதமும் இல்லாமல் பொருட்களை அகற்றப்பட்டன.
– இரா.நம்பிராஜன்