முக்கியச் செய்திகள் தமிழகம்

தேசியகீதம் அவமதிப்பு; உதவி காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்

தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் சஸ்பென்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, விழாவில் இருந்த அனைவரும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த நாமக்கல்லை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர்  சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார். போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக எழுந்து நின்றார். இதனை வீடியோ பதிவு செய்தவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.மேலும் உதவி காவல் ஆய்வாளர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதைஅடுத்து, உதவி காவல் ஆய்வாளர் சிவபிரகாசத்தை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி அதிரடியாக உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கிறார்கள்” : ராகுல் காந்தி

Halley Karthik

பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை: மாநில தேர்தல் ஆணையம்

G SaravanaKumar

“கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்”

Gayathri Venkatesan