முக்கியச் செய்திகள் தமிழகம்

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 1,127 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தியதன் மூலம் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசெண்ட் திவ்யாவின் மகனுக்கு சமீபத்தில் கொரோனா உறுதியானதால், கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். தமிழ்நாட்டு ஆளுநர் ஆர். என். ரவி ஊட்டியில் சுற்றுப்பயணம் முடித்த பின்பு சென்னைக்கு திரும்பினார். இவரை வழியனுப்பும் நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து பிங்கர்போஸ்ட் அருகே உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காலமானார்!

Gayathri Venkatesan

11ம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து!

Saravana Kumar

பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

Gayathri Venkatesan