இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்
இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்க கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இறக்குமதி காரின் நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டதாக கூறப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு உழைப்பில் வாங்கிய காரை, நீதிபதி விமர்சித்து இருப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்துக்கள் என கூறப்பட்டுள்ளது. தன்னுடைய வழக்கு மட்டுமின்றி நடிகர்கள் சூர்யா, தனுஷ் வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கக்கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.