#INDvsBAN டி20 போட்டி | டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20…

#INDvsBAN | Indian team won the toss and chose to bat!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இதையும் படியுங்கள் : பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘#Dragon’ படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு!

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (அக்.12ம் தேதி) நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா விளையாடுகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.