#INDvsBAN 3rd T20 Match  | இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதல்!

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் குவாலியரில்…

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இதையும் படியுங்கள்: #kavaraipettai ரயில் விபத்து | புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்!

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (அக்.) நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா போராடும். அதே நேரத்தில், ஆறுதல் வெற்றிக்காக வங்காளதேச அணி கடுமையாக போராடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.