பட்ஜெட் தயாரிப்பில் தொழில்துறையினரின் கருத்துகள் பலம் வாய்ந்ததாக இருக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையினரின் கருத்துகள் பெரும் பலம் வாய்ந்ததாக இருக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை தொடர்பாக தொழிற்துறையினருடனான கருத்து கேட்புக்கூட்டம், சென்னை…

நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையினரின் கருத்துகள் பெரும் பலம் வாய்ந்ததாக இருக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை தொடர்பாக தொழிற்துறையினருடனான கருத்து கேட்புக்கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பல்துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

வரும் மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் : Live Updates

இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு தொழிற்துறையினரிடம் கருத்துக் கேட்கும் முறை தொடங்கப்பட்டது. நிதி மேலாண்மையில் இருக்கும் ஆழ்ந்த அறிவின் காரணமாக, நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தயாரிக்கும்போது பெரும் பலம்வாய்ந்ததாக தொழில்துறை பிரதிநிதிகளின் கருத்துகள் இருக்கும். தொழில் வணிகம் செய்வதற்கு தமிழ்நாடு எப்போதும் உகந்ததாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.