ஸ்டாலின் தன்னை பிரதமராக ஏற்றுக்கொள்பவர்களை பேச வைத்து மகிழ்ச்சியடைகிறார்: பாஜக வி.பி துரைசாமி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பிரதமராக ஏற்றுக்கொள்பவர்களை பேச வைத்து மகிழ்ச்சியடைவதாக பாஜக துணைத்தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திமுக…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பிரதமராக ஏற்றுக்கொள்பவர்களை பேச வைத்து மகிழ்ச்சியடைவதாக பாஜக துணைத்தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திமுக சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சி மைதானத்தில் நேற்று சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ”மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியதோடு, முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் பாஜக துணைத்தலைவர் வி.பி துரைசாமி இன்று நியூஸ் 7 தமிழுக்குப் பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் 35 வயதாகிவிட்டாலே நாடாளுமன்ற உறுப்பினரானால் பிரதமராவதற்கு தகுதிதான். ஆனால் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை பிரதமராக ஏற்றுக்கொள்பவர்களை பேச வைத்து மகிழ்ச்சியடைகிறார் . நேற்று நடந்த பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் வேட்பாளராக தன்னை promote செய்பவர்களை மேடையில் உட்கார வைத்து, மதிமுக, இடதுசாரிகளை கேவலப்படுத்திவிட்டார் ஸ்டாலின் .எல்லோரும் ஸ்டாலினை பிரதமராக முன்னிறுத்தி பேசுவதை பார்த்தால், உதயநிதியை முதலமைச்சராக்குவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? ஸ்டாலினுக்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த செய்தியாளரின் கேள்விக்கும் பதிலளித்து பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வாங்கிய பணத்தை பயன்படுத்திய விதத்திற்கான Utilisation Certificate சமர்ப்பித்து விட்டார்களா? என்று தெரியவில்லை. சான்றிதழ் கொடுக்காமல் நிதியில்லை, நிதியில்லை என்கிறார்கள் என்று கூறிய அவர், திரிபுரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பது குறித்தும் பேசினார். அப்போது வலிமையாக கம்யூனிஸ்ட் இருக்கும் திரிபுரா மாநிலத்தில் இரண்டாம் முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. இதற்கு ஊழலற்ற ஆட்சியே காரணம் என தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.