முக்கியச் செய்திகள் தமிழகம்

மறைமுகத் தேர்தல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றுள்ளன. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தலைவர், துணைத் தலைவருக்கான பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

தேர்தல் கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பில் உள்ள இடத்தில் தான் தேர்தலை நடத்த வேண்டும். வேறு இடத்தில் நடத்தினால் அது செல்லாது.

கூட்டம் தொடங்கிய உடன், வருகை புரிந்துள்ள உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும்.

பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருப்பின் தேர்தல் நடத்தக்கூடாது

.பெரும்பான்மை உறுப்பினர்களின் வருகைக்காக 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

30 நிமிடங்களுக்கு பின்னரும் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வரவில்லையென்றால் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்.

கிராம ஊராட்சி தலைவர் யாருக்கும் முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது.

துணைத் தலைவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், உறுப்பினர்கள் வாக்காளர்களாக கருதப்படுவர்.

துணைத்தலைவர் தேர்தலில் போட்டியில்லாவிட்டால், வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவித்து அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும்

ஒரு பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டு சம வாக்குகளைப் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு

Vandhana

அரசு தாய்,சேய் மருத்துமனை அமைத்துதருவேன்: என்.ஆர். தனபாலன்!

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்!

Ezhilarasan