இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதற்காக, பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும் பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகளை விட அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Congratulations, Prime Minister @narendramodi, the scientists, #healthworkers and people of #India, on your efforts to protect the vulnerable populations from #COVID19 and achieve #VaccinEquity targets.https://t.co/ngVFOszcmE
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) October 21, 2021
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், (Tedros adhanom) இந்திய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும், தடுப்பூசி இலக்குகளை அடையவும் பெரும் முயற்சி செய்யும் பிரதமர் மோடி, சுகாதாரத்துறை ஊழியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.