முக்கியச் செய்திகள் உலகம்

இந்தோனேசியா: மசூதியில் புதுப்பிக்கும் பணியின் போது தீவிபத்து

இந்தோனேசியாவில் உள்ள பெரிய மசூதியின் பிரமாண்டமான குவிமாடம் புதுப்பிக்கும் பணியின் போது தீ விபத்துக்குள்ளானது.

இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் பெரும் தீவிபத்தில் இடிந்து விழுந்தது. இந்த தீவிபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழும் காட்சிகள் பதிவாகியிருந்து. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மசூதியின் குவிமாடம் புதுப்பிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அந்த நேரத்தில் இஸ்லாமிய மையம் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிபத்து அல்லது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடிபாடுகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், கட்டிடத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மசூதியின் குவிமாடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும் போது இதேபோல் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்ட தீயை அணைக்க 5 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் போராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாளை சிவ சேனா தேசிய செயற்குழு கூட்டம்: உத்தவ் தாக்கரே

Mohan Dass

கிராம உதவியாளர் தற்கொலை முயற்சி!

G SaravanaKumar

’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

Halley Karthik