“காசி தமிழ் சங்கமம்” என்ற இணையதளத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
“காசி தமிழ் சங்கமம்” இணைய தளத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த நிகழ்ச்சி தொடர்பாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் டெல்லி தேசிய ஊடக மையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், காசிக்கும் தமிழகத்துக்குமான கலாச்சார, பண்டைய தொடர்பு மற்றும் அறிவுசார் தொடர்புகளை கண்டறியும் விதமாகவும், புதுப்பிக்கும் விதமாகவும் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ” காசி தமிழ் சங்கமம்” திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
https://twitter.com/dpradhanbjp/status/1583059361953624064
இதற்காக ராமேஸ்வரம், கோவை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 8 குழுக்களாக பல்வேறு பிரிவுகளை (வணிகம், கலை, இலக்கியம் ) உள்ளிட்டவையை சார்ந்த 2500 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில்கள் மேற்கண்ட நகரங்களில் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரம்-காசிக்கும் இடையேயான பல ஆண்டு தொடர்பு உள்ளது. கலாச்சார இணைப்பு உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை எடுத்துக் கூறும் விதமாக நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்துக்கும் – காசிக்குமான பிணைப்பை மக்களிடம் எடுத்து செல்லும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.







