ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜாலோர் மாவட்டத்தில் மகேஷ்பூர் என்ற இடத்தில் நேற்று இரவு இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் இருவரும் பலியாகினர். படுகாயம் அடைந்து மீட்கப்பட்ட பயணிகளில் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 17 பேர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து குறித்து போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







