இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே பெகாசி திமூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.







