சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 230-க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,100-க்கும், வரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







