தெற்கு சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

தெற்கு சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் அருகே தெற்கு சூடான் நாடு அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அந்நாட்டின் யொயி நகரில் இருந்து தலைநகர் ஜுயாவுக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் விமானி உள்பட 14 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், தலைநகர் ஜூபா அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 14 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விமான விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.