இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்துள்ளது. இதனால் சேறு, பாறைகள், இடிபாடுகளுடன் வெள்ள நீரால் மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருகில் சிக்கி வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி கூறுகையில், “பல நாட்களாக பெய்த பருவமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு திங்கள்கிழமை அதிகாலை ஆறுகளின் கரைகள் உடைத்தது. இதனால் சேறு, பாறைகள், இடிபாடுகளுடன் வெள்ள நீரால் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனா்.
சியாவ் தகுலண்டாங் பியாரோ மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதில் 16 போ் உயிரிழந்த நிலையில் 148 பேரைக் காணவில்லை. இதற்காக அவசர மீட்புப் படையினா் காவல்துறை மற்றும் ராணுவத்தின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.







