இண்டிகோவின் 500 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் – ரிஷி சுனக் ட்விட்!

‘இண்டிகோ’ விமான நிறுவனம், ‘ஏர்பஸ்’ நிறுவனத்தின் ‘ஏ – 320’ ரகத்தைச் சேர்ந்த, 500 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தால் நாட்டில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். குறைந்த…

‘இண்டிகோ’ விமான நிறுவனம், ‘ஏர்பஸ்’ நிறுவனத்தின் ‘ஏ – 320’ ரகத்தைச் சேர்ந்த, 500 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தால் நாட்டில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

குறைந்த கட்டண விமான சேவை அளித்து வரும் இண்டிகோ நிறுவனம் ஏா்பஸ் விமான நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களைக் கொள்முதல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஏா்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு விமான சேவை நிறுவனம் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்பு டாடா குழுமத்தின் ஏா்-இந்தியா விமான சேவை நிறுவனம் போயிங் மற்றும் ஏா்பஸ் நிறுவனங்களிடம் இருந்து 470 விமானங்களை வாங்க கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டதே மிக அதிகமாக இருந்தது. தற்போது, இண்டிகோ, 300க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது. ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக 480 விமானங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அவை இண்டிகோ நிறுவனத்திற்காக தயாராக உள்ளன.

இந்த விமானங்களை, ஏர்பஸ் நிறுவனம், 2030ம் ஆண்டு முதல் 2035 ஆண்டிற்குள் இண்டிகோ நிறுவனத்திற்கு வழங்க உள்ளது. இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் அந்த நிறுவனம் சுமாா் 1,000 புதிய விமானங்களை வாங்க இருக்கிறது. இவை பெரும்பாலும் சிறியரக பயணிகள் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 55 பில்லியன் டாலர் விலை கொண்ட இந்த ஒப்பந்தம் இதுவரை இல்லாத மிக உயர்ந்த சிவில் ஏவியேஷன் ஆர்டர் என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகார் பீட்டர் எல்பர்ஸ் கூறினார்.

https://twitter.com/RishiSunak/status/1671193885777834005?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1671193885777834005%7Ctwgr%5E48ace1bbefc8812ff7476870a1e5017a85bf44c2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-16158798581682019799.ampproject.net%2F2305252018001%2Fframe.html

இந்த ஒப்பந்தம் குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து விமானத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் மற்றும் பொருளாதாரத்தை வளர்க்க உதவும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.