உசிலம்பட்டியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 10 மாத குழந்தை தனது
பாட்டி துணையுடன் யோகா செய்யும் வீடியோ காட்டி வைரலாகி வருகிறது.
இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யோகா
செய்வதை ஊக்குவிக்கும் வண்ணம் காவல்துறையினர், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்
மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு
விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் புதுத் தெருவைச் சேர்ந்த
கண்ணன் – ரீனா தம்பதியின் 10 மாத பெண் குழந்தையான லோகிதா என்பவர் தனது பாட்டி பழனியம்மாள் உதவியுடன் யோகா செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. யோகா செய்வதில் ஆர்வம் கொண்ட பாட்டி பழனியம்மாள், 5 மாத குழந்தையாக இருக்கும் போது இருந்தே குழந்தைக்கு யோகா பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாட்டியின் துணையுடன் இந்த 10 மாத குழந்தையான லோகிதா புன்னகையுடன் யோகா செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போரைக் கவர்ந்து வருகிறது.







