75 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வியறிவு?

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் 75 சதவீத கல்வியறிவை பெற்றுள்ளது. இந்தியா சுமார் 100 ஆண்டு காலம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு இருந்தது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்த…

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் 75 சதவீத கல்வியறிவை பெற்றுள்ளது.

இந்தியா சுமார் 100 ஆண்டு காலம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு இருந்தது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்த சுதந்திரத்திற்காக எண்ணற்ற தலைவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். அதன் பயனாக தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். இன்றுடன் இந்நியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்தியா சுதந்திரம் அடையும் போது நமது நாட்டில் கல்வியறிவு எவ்வளவு இருந்தது. தற்போது மக்களின் கல்வியறிவு எவ்வளவு இருக்கிறது என்பதை நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சிபிடியில் இருந்து மீண்ட போது பெரும் மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தது. இதில் பெரும்பாலான மக்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாத நிலையே இருந்தது. 1950ம் ஆண்டுக்கு முன் வரை 10ல் 2 பேர் தான் இந்தியாவில் படிப்பறிவு உடையவர்களாக இருந்தனர்.

1951ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டு வரை படிப்பறிவு பெற்றவர்களின் 74.4 சதவீதமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா கல்வி பெற்ற தேசமாக விளங்குகிறது. 2018ம் ஆண்டில் இந்தியாவில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 82.4 சதவீதமாகவும், பெண்களின் படிப்பறிவு 65.8 சதவீதமாகவும் இருந்தது. இதுவரை கடந்து வந்த ஆண்டுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்வி பெறும் சதவீதம் சீராக அதிகரித்து வந்துள்ளது.

சமீபகாலங்களில் தொடக்கக்கல்வி பெறும் பெண் மற்றும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் இந்தியா மக்கள்தொகையில் இன்னும் 25 சதவீத மக்கள் கல்வி அறிவு பெறாதகவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவின் புதிய தேசிய கல்வி கொள்கை நாட்டில் 100 சதவீதம் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது. நமது நாடு இப்போதும் முழு கல்வியறிவு பெற வேண்டும் என்ற பாதையில் தான் பயணித்து கொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.