சென்னை : இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து – 12 வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

தாம்பரத்தில் செயல்பட்டு வந்த இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 புதிய இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமானது.   சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்து மிஷின் மருத்துவமனை உள்ளது. இதற்கு…

தாம்பரத்தில் செயல்பட்டு வந்த இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 புதிய இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமானது.

 

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்து மிஷின் மருத்துவமனை உள்ளது. இதற்கு எதிர்புறம் ஹூண்டா ஷோரூம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே உள்ளே இருந்த பணியாளர்கள் பத்திரமாக வெளியேறினர்.

 

பின்னர் சிறிது நேரத்திலேயே தீ மள மளவென எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி கரும்புகையாக காட்சியளித்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருந்தபோதிலும், இந்த தீ விபத்தில் 12 புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கணினிகள், இருசக்கர வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்து குறித்து தாம்பரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.